மழையால் கடும் பாதிப்பிற்குள்ளாகி வரும், அரசு பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்தாமல், கல்வித்துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாக புதுச்சேரி எம்.எல்.ஏ பிரகாஷ்குமார் குற்றம் சாட்டி உள்ளார். முத்தியால்பேட்டை அரசு பள்ளியை பார்வையிட்ட பிறகு வீடியோ வெளியிட்ட அவர், 2 ஆண்டுகளாக அரசு பள்ளியை சீரமைக்க கோரிக்கை வைப்பதாகவும், இதுவரை யாரும் செவிசாய்க்கவில்லை எனவும் வேதனை தெரிவித்தார். பாதுகாப்பற்ற நிலையில் மாணவர்கள் கல்வி பயில்வதாக பிரகாஷ்குமார் வருத்தம் அடைந்தார்.