"அனைத்து அமைச்சர்களையும்; குண்டு வைத்துத் தகர்ப்போம்.." அலறவிட்ட ஈ-மெயில் - ஹை அலர்ட்டில் தலைநகர்

Update: 2024-02-15 07:14 GMT

டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு கிடைத்துள்ள மின்னஞ்சலில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிப்ரவரி 15ஆம் தேதி மிகப்பெரிய அளவில் குண்டு வெடிக்கும் என்றும், இந்த குண்டுவெடிப்பு டெல்லியில் மிகப்பெரிய அளவில் இருக்கும் எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது... மேலும் எவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தாலும், அனைத்து அமைச்சர்களை அழைத்தாலும் அனைவரையும் குண்டு வைத்துத் தகர்ப்போம் எனவும் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற வளாகத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மிரட்டல் கடிதம் தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப் பட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற நுழைவாயிலில் சூட்கேசில் வைக்கப்பட்டிருந்த குண்டு கடந்த 2011, செப்டம்பர் 7ஆம் தேதி வெடித்து 15 பேர் பலியானதும் 79க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது...

Tags:    

மேலும் செய்திகள்