"எனக்கு வந்த பத்மஸ்ரீ விருதை அவர் வாங்கி விட்டார்.." உயர் நீதிமன்றம் அதிரடி | Padma Shri
பத்மஸ்ரீ விருதுக்கு ஒரே பெயரைக் கொண்ட இருவர் உரிமை கோரும் விவகாரத்தில் ஒடிசா உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2023ம் ஆண்டு இலக்கியம் மற்றும் கல்விக்காக ஒடிசாவை சேர்ந்த அந்தர்யாமி மிஷ்ராவுக்கு பத்மஸ்ரீ அறிவிக்கப்பட்ட நிலையில், பத்திரிகையாளர் அந்தர்யாமி மிஷ்ரா அந்த விருதை பெற்று கொண்டார். இந்த நிலையில், இதனை எதிர்த்து மருத்துவர் அந்தர்யாமி மிஷ்ரா, தாம் ஒடியாவில் 90 புத்தகங்களை எழுதியிருப்பதாக கூறி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில், ஒரே பெயரை கொண்ட இருவரும் தாங்கள் எழுதிய புத்தகங்களுடன் பிப்ரவரி 24-ஆம் தேதி ஆஜராகுமாறு ஒடிசா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.