மணமகனுக்கு தண்ணில கண்டம்.. தாலி ஏறும் நொடியில் திருமணத்தையே நிறுத்திய மணமகள்
கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் குடிக்க தண்ணீர் தரவில்லை என்ற காரணத்திற்காக மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது. சித்ரதுர்காவைச் சேர்ந்த software engineers-ஆன மனோஜ்குமார் மற்றும் அனிதாவிற்கு திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகள் குடும்பத்தினர் தங்கிய இடத்தில் குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் தகராறு ஏற்பட்டு, மணமகள் அனிதா திருமணத்தை நிறுத்தியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,.