சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 31 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பீஜாப்பூர் மாவட்டம், தேசிய பூங்கா பகுதியை அடுத்த வனப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தனர். அப்போது, இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 31 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.