மளமளவென பற்றி எரிந்த 6 மாடி உணவக கட்டிடம் - உள்ளே இருந்தவர்களின் நிலை?

Update: 2025-04-11 10:47 GMT

மகாராஷ்டிராவில், 6 மாடி கட்டிடத்தில் அமைந்துள்ள உணவகத்தில், நள்ளிரவில் பெரும் ​தீ விபத்து ஏற்பட்டது. சத்ரபதி சம்பாஜிநகர் Chhatrapati Sambhajinagar, தி​ஸ்கான் காவ்டா மலைக்கு Tisgaon Khavda Hill அருகிலுள்ள ஹோட்டல் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டு, மளமளவென அனைத்து தளங்களுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. காற்றின் வேகத்தால் தீப்பொறி பறந்தது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த உணவகம், ஏக்நாத் ஷிண்டே சிவசேனா தரப்பை சேர்ந்த எம்.எல்.ஏ. பிரதீப் ஜெய்ஸ்வாலுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்