பேரன்ட்ஸ் மீட்டிங்கில் பெண் HM ஐ ஆக்ரோஷமாய் தாக்கிய இளைஞர் - பள்ளி வளாகத்தில் உச்சகட்ட பரபரப்பு
கேரளாவில் அரசு பள்ளியில் புகுந்து தலைமை ஆசிரியரை தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். பத்தனம்திட்டா மாவட்டத்தில் மலையாள புழா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்ற போது, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் விஷ்ணு நுழைந்த போது, தலைமை ஆசிரியை கீதா ராஜ் அவரை வெளியேறுமாறு கூறியுள்ளார். அப்போது, அவரை தகாத வார்த்தைகளால் திட்டிய இளைஞர், கீதாவை தாக்கியதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் இளைஞரை கைது செய்த போலீசார், தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.