அதிகாரிகள் வந்த காருக்கு RTO கையாலே அபராதம் போட வைத்த மக்கள் - வைரலாகும் வீடியோ

Update: 2025-02-24 07:31 GMT

மாசுக்கட்டுபாட்டு சான்றிதழ் இல்லாத வாகனத்தில் வந்ததாக ஆர்.டி.ஓ அதிகாரிகளை பொதுமக்கள் தடுத்து கேள்வி எழுப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஒய்யூர் பகுதியில் வாகனத்தில் வந்த வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மாசுக்கட்டுபாட்டு சான்றிதழ் இல்லாமல் சென்ற வாகனங்களுக்கு அபராதம் விதித்துள்ளனர். அப்போது, அதிகாரிகள் வந்த வாகனத்திற்கு சான்றிதழ் இல்லை என்பதை அறிந்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் வந்த வாகனத்திற்கு அபராதம் விதிக்க வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்