தனியார் பஸ்ஸில் 150 வெடிகுண்டுகள் - கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தால்... அதிர்ந்து போன போலீசார்

Update: 2025-03-28 03:04 GMT

கேரள மாநிலம் கண்ணூரில் தனியார் பேருந்தில் இருந்து 150 வெடிகுண்டுகள் மீட்கப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கண்ணூரில் இருந்து இரிட்டிக்கு சென்று கொண்டிருந்த அந்த பேருந்தை, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது பயணிகளின் இருக்கைக்கு அடியில் 150 வெடிகுண்டுகளுடன் பார்சல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்