Kerala | Drugs | HIV | ஒரே ஒரு ஊசி.. 10 பேருக்கு தொற்றிக் கொண்ட HIV.. போதையால் நடந்த பயங்கரம்
பச்சை பசேல்னு மலைகள், செக்க சிவந்த அரசியல்...
கட்டன் சாயா... கப்பக்கிழங்கு...
இப்படி கேரளாவோட பேரக்கேட்டதுமே அந்த கடவுளோட சொந்த பூமி தான் நம்ம நினைவுகள்ல வரும்....
ஆனா... சமீப நாட்களா கடவுள் தேசத்து குழந்தைகளோட எதிர்காலத்தயே கேள்விக்குறியாக்கி இருக்கு போதை பழக்கம்.
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு விதவிதமான போதை பொருட்களயும், அந்த விற்க கூடிய புல்லட் ராணிகளயும் போலீஸ்அரஸ்ட் பண்ணிக்கிட்டே இருந்தாலும் போதைக்கு அடிமையான இளைஞர்களுக்கு ஏதாவது ஒரு வகையில Drugs-ம் தொடர்ந்து சப்ளை ஆகிட்டே தான் இருக்கு.
இந்த நிலையில தான், கடந்த சில வருடங்களாவே கேரளாவுல எச்.ஐ.வி நோயால பாதிக்கபட்டவங்ளோட எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகிட்டே இருந்திருக்கு.
குறிப்பா, கடந்த 2021 க்கு பிறகு 25 வயசுக்குட்பட்ட இளைஞர்கள் HIV-யால அதிகளவுல பாதிக்கப்படுறத உணர்ந்த சுகாதார துறை அதிகாரிகள் அதுகுறித்த ஆய்வு மேற்கொண்டு இருக்காங்க.
அதன்படி, Kerala AIDS Control Society கடந்த ரெண்டு மாசமா
Survey நடத்தி இருக்காங்க. அந்த கணக்கெடுப்போட முடிவு தான் இப்போ ஒட்டு மொத்த கேரளவையும் பதற வைக்கக்கூடிய பிரேக்கிங் நியூஸ்ஸா மாறியிருக்கு.
வழக்கமா, பாலியல் உறவு இல்லாம, டாட்டூ, ரத்ததானம் போன்ற பல வழிகள்லயும் HIV Spread ஆகுறதுக்கான Possibilities உண்டு.
இதெல்லாம் Accidental-ஆ நடக்க கூடிய விசயங்கள் தான்.
ஆனா, இங்கொரு கேங் தெரிஞ்சே தங்களோட உடம்புல பலமுறை HIV வைரஸ்ஸ செலுத்தி இருக்கிறது தான்
தான் கொடுமையின் உச்சம். அதற்கு காரணம் போதை...
கேரளா மாநிலம் மலபுரம் பகுதிய சேர்ந்த ஒரு இளைஞர் HIV-யால பாதிக்கப்பட்டு மருத்துவமனையில அட்மிட் ஆகி இருக்காரு.
அவருக்கு எப்படி ? யார் மூலமா ? நோய் தொற்று வந்துச்சுங்கிற விசாரணையில இறங்கினப்போ தான்.
அந்த இளைஞருக்கு போதை ஊசி பயன்படுத்துற பழக்கம் இருக்குறது தெரியவந்திருக்கு.
அதுவும் ஒரே ஊசிய வாங்கி , நண்பர்களுக்குள்ள மாத்தி மாத்தி குத்தி இருக்கங்கனு தெரிஞ்சதும். மருத்துவ குழு ஒரு நிமிசம் ஆடி போயிருக்காங்க.
உடனடியா, அந்த இளைஞரோட போதை நண்பர்கள கண்டு புடிச்சு அவங்களயும் பரிசோதிச்சு இருக்காங்க.
அப்போ தான், அவரோட ஃபிரெண்ட்ஸ் 10 பேருக்குமே HIV Positive-னு Confirm ஆகி இருக்கு.
உடனடியா எல்லாரையும் மருத்துவமனையில அனுமதிச்ச நிலையில, அவங்களோட தொடர்புல இருந்த குடும்பத்தார்கள், நண்பர்கள்னு பலரையும் ரகசியமா சோதனை செஞ்சுக்கிட்டு இருக்காங்க.
அதிகாரிகளோட முழுமையான ஆய்வோட முடிவுல மேலும் பலருக்கும் HIV Positive-னு ரிசல்ட் வர்றதுக்கான சான்ஸ் 1இருக்கிறதா சொல்லப்படுது. போதை ஊசி மூலமா இளைஞர்களுக்குள்ள HIV பரவி இருக்கிறது இப்ப கேரளா மட்டுமில்லாம போதை பழக்கத்திற்கு Addict ஆன பலரையும் கதிகலங்க வெச்சிருக்கு.