குட்டி யானையை வேட்டையாட வந்த புலிக்கு மரண பயத்தை காட்டிய தாய் யானை - வைரல் வீடியோ

Update: 2025-01-14 12:07 GMT

கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதியில், குட்டி யானையை வேட்டையாட முயன்ற புலியை, தாய் யானை விரட்டிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பந்திப்பூர் புலிகள் காப்பக வனப்பகுதியில் வனத்துறை வாகனங்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட சுற்றுலா பயணிகள், குட்டியுடன் யானைக்கூட்டம் ஆற்றில் தண்ணீர் குடிப்பதை வீடியோ பதிவு செய்தனர். அப்போது ஆற்றின் மேல்பகுதியில் புலி படுத்தவாறு குட்டியானையை நோட்டமிட்டு வேட்டையாட முயன்றது. அப்போது தாய் யானையுடன் மற்ற யானைகளும் சேர்ந்து ஆக்ரோஷமடைந்து அந்தப் புலியை விரட்டின.யானைக் கூட்டத்திடமிருந்து புலி தப்பி ஓடிய காட்சிகளை சுற்றுலா பயணிகள் பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்