குஜராத்தில் இளைஞர் ஒருவர் மதுபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதால், பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வதோதராவில் முக்தனாந்த் (Muktanand) சாலை அருகே, ரக்ஷித் சௌராசியா (Rakshit Chaurasiya) என்ற சட்டக்கல்லூரி மாணவர் நள்ளிரவில் காரை ஓட்டிச் சென்றார். அதிவேகமாக சென்ற அவர், சாலையில் சென்ற இருசக்கர வாகனங்களை இடித்து தள்ளிவிட்டு சென்றார்.விபத்தை ஏற்படுத்திய இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஹேமாலி படேல் என்ற பெண் உயிரிழந்துள்ளார். 8 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.