"ஸ்ரீநகரில் இருந்து நாடு முழுவதும்..." | காஷ்மீர் அட்டாக்கை அடுத்து பறந்த உத்தரவு

Update: 2025-04-23 12:57 GMT

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, ஸ்ரீநகர் விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் போதிய அளவில் விமானங்களை இயக்க, விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் இருந்து நாடு முழுவதும் விமான போக்குவரத்து இணைப்பை அதிகப்படுத்த அறிவுறுத்தியுள்ள விமான போக்குவரத்து துறை இயக்குனரகம், மாற்றி அமைக்கும் பயணம், ரத்து செய்யும் டிக்கெட்டுகளுக்கு கட்டணத்தை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்