குடும்பத் தகராறு...தாய், 4 சகோதரிகளைக் கொன்ற கொடூரன்..!

Update: 2025-01-01 08:24 GMT

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள விடுதி ஒன்றில் 5 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

ஷரன் ஜீத் விடுதியில் 5 பேர் இறந்து கிடந்தனர்... போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று 5 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்... தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திய நிலையில், குடும்ப தகராறு காரணமாக, ஆக்ராவைச் சேர்ந்த 24 வயதான அர்ஷத் தனது 4 சகோதரிகள் மற்றும் தாயைக் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது... இதையடுத்து போலீசார் அர்ஷத்தைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்