கேரளாவில் அதிகரிக்கும் டெங்கு, எலி காய்ச்சல் - 200 பேருக்கு நேர்ந்த கதி

Update: 2024-01-06 10:40 GMT

கேரளாவில் கடந்த 5 நாட்களில் 200 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கேரளாவில் கடந்த 5 நாட்களில் சுமார் 40 ஆயிரம் பேர் காய்ச்சலுக்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். குறிப்பாக, டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 5 நாட்களில் 200 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். எலிக்காய்ச்சலால் 31 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், பன்றிக்காய்ச்சல், சின்னம்மை பாதிப்பும் அதிகரித்துள்ளது. இதனால் அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், மாத்திரைகள் கிடைக்காமல் பொதுமக்கள் வெளியில் காசு கொடுத்து வாங்கும் நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது. மழை தொடர்வதால் காய்ச்சல் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்