டெல்லிக்கு வரும் யமுனா நதியில் அளவுக்கு அதிகமாக நச்சுப் பொருளான அமோனியாவை கலந்திருப்பதாக ஹரியானா மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டிருந்தார். இதனை கண்டித்த ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி , கெஜ்ரிவால் அவரது கருத்தை திரும்ப பெறாவிட்டால் அவர் மீது சட்டப்படி அவதூறு வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் , இந்த மிரட்டலுக்கு தாம் பயப்பட போவதில்லை என்றும் டெல்லி மக்களை நான் சாக விடமாட்டேன் என்றும் கெஜ்ரிவால் பேட்டியளித்துள்ளார்.