காவிரி விவகாரத்தில் பாஜகவினர் இரட்டை வேடம் போட்டு, அரசியல் ஆதாயம் தேடுவதாக, கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.
மேகதாது திட்டத்தில் தமிழகம் தேவையில்லாமல் பிரச்சனைகளை எழுப்பி வருவதாக தெரிவித்தார்.
மேகதாது திட்டத்தில் தேவையில்லாமல் தமிழகம் கெடுபிடிகளை உருவாக்கி வருவதாகவும், கர்நாடகா விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பித்தும் மத்திய பாஜக அரசு அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறினார். காவிரி தொடர்பாக நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் போது இந்த விவகாரத்தில் முழு ஒத்துழைப்பு கிடைக்கும் என்றும் அரசியல் செய்ய மாட்டோம் என்றும் கூறிய பாஜக, வெளியில் வந்து அணையில் இருந்து தமிழகத்திற்கு அதிக தண்ணீர் திறந்து விட்டதாக குற்றம் சாட்டி அரசியல் ஆதாயம் தேடுவதாக தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் இறுதி வரை தமிழகத்திற்கு 86 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் ஆனால் அதில் பாதிகூட திறக்கப்படவில்லை என்றும் சித்தராமயா தெரிவித்தார்.
-