இந்தியாவில் முதல் பசுமை ஸ்டீல் அறிமுகம் செய்த ஏ.ஆர்.எஸ். ஸ்டீல்ஸ்

Update: 2025-03-28 12:50 GMT

இந்தியாவின் முதல் பசுமை ஸ்டீல் பார்களை, ஏ.ஆர்.எஸ். ஸ்டீல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஒடிசாவில் உள்ள புவனேஷ்வரில் புதிய தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படும் இந்தவகை ஸ்டீல்கள், கட்டுமான துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எபிக் குரூப் மற்றும் சென்ட்ரா ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த பசுமை ஸ்டீல்கள் தயாரிக்கப்படுவதாக ஏ.ஆர்.எஸ். நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் பசுமையை நோக்கி செல்வதாகவும், அதனால், இந்த வகை ஸ்டீல்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் தன்மை கொண்டதாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்