யூ-டியூப் சேனலுக்கு அண்ணாமலை அளித்த பேட்டி குறிப்பிட்ட மதத்திற்கு எதிரான வெறுப்புணர்வை தூண்டும் வகையில் அமைந்துள்ளது என்பதற்கு முகாந்திரம் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் உத்தரவில், அண்ணாமலை தரப்பு வாதத்தை ஏற்க முடியாது என்றும், இதுபோன்ற பேச்சுகள் எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடிய வெடிகுண்டை போன்றது என்றும் கூறப்பட்டுள்ளது. அண்ணாமலையின் பேட்டியில் சமுதாயத்தை பிளவுபடுத்த வேண்டுமென்ற உள்நோக்கம் அவருக்கு இருந்துள்ளது என்பதற்கு முகாந்திரம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.