"சனாதன விவகாரம்; திமுகவை ஆதரித்திருக்கக் கூடாது" - பற்ற வைத்த Ex காங் நிர்வாகி
சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியாவுடன் ஒப்பிட்டுப் பேசிய திமுக தலைவர்களை, காங்கிரஸ் ஆதரித்திருக்கக் கூடாது என்று, அக்கட்சியில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட முன்னாள் தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குலாம் நபி ஆசாத், கமல்நாத்,திக்விஜய சிங் மற்றும் ஆனந்த் சர்மா போன்றோர்,இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்தியுடன் பக்க பலமாக இருந்தவர்களை, ராகுல்காந்தி மதிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். கடவுள் நம்பிக்கை உள்ள நான், பிரதமர் மோடியுடன் இருப்பதாக, பிரமோத் கிருஷ்ணம் கூறினார்.