தமிழ் சினிமாவின் அழிக்க முடியாத இடத்தை பெற்ற படத்தின் சில்வர் ஜூபிலி | Vikram | Bala | Tamil Movie

Update: 2024-12-10 02:00 GMT

இயக்குநர் பாலா இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவான சேது திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த திரைப்படம் 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. தமிழ் சினிமாவில் அழிக்க முடியாத இடத்தை பெற்றுள்ள இப்படத்தில், சிவகுமார், அபிதா, ஸ்ரீமன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஆரம்ப காலகட்டத்தில் தோல்விகளை மட்டுமே சந்தித்த விக்ரம் 9 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு முதல் முறையாக 'சேது' படத்தின் மூலம் வெற்றியின் முதல் படியைத் தொட்டார். இப்படத்திற்காக 13 கிலோ வரை எடையை குறைத்த விக்ரம், மொட்டையடித்து மனநல காப்பகத்தில் இருப்பவர்கள் போல உடை அணிந்து தனது நடிப்பை வெளிப்படுத்தியது பார்வையாளர்களை அதிர வைத்தது. சேது படத்தை இயக்கிய பாலாவின் 25 ஆண்டு கால திரையுலக பயணத்திற்கு விழா ஒன்றை எடுக்க தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்