பிரபல இயக்குநர் சீனு ராமசாமி தனது மனைவியை பிரிவதாக அறிவித்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்யராஜ் நடிப்பில் வீரநடை என்ற திரைப்படத்தை சீமான் இயக்கி கொண்டிருந்தபோது, சீமானிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் சீனு ராமசாமி. இவர், பரத் நடிப்பில் கூடல்நகர் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். எதார்த்த வாழ்க்கையை கதைக்களமாக அமைக்கும் இவர், கதாநாயகனாக விஜய் சேதுபதி அறிமுகமான தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அந்த திரைப்படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்தது. இதனையடுத்து இவரது இயக்கத்தில் வெளியான நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களும் வரவேற்பை பெற்றது. நடிகர் விஜய் சேதுபதிக்கு மக்கள் செல்வன் என்ற பட்டத்தை கொடுத்த சிறப்பும் இவருக்கு உண்டு...