``அத கேக்க கூடாதுனு ஆல்ரெடி சொல்லி இருக்கேன்ல’’ - டோனை மாற்றி பிரஸ்மீட்டில் ரஜினி காட்டம்

x

அரசியல் கேள்விகள் தன்னிடம் கேட்க வேண்டாம் என்று செய்தியாளர்களிடம், நடிகர் ரஜினிகாந்த் காட்டமாக தெரிவித்துள்ளார். கூலி படத்தின் படப்பிடிப்புக்காக தாய்லாந்து செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு அவர் வந்தார். அப்போது, ரசிகர்கள் தலைவா, தலைவா என்று கத்தியதால், கத்த வேண்டாம் என்று ரஜினிகாந்த் அறிவுறுத்தினார். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ரஜினிகாந்த், கூலி படத்தின் 70 விழுக்காடு பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம் என்று ஏற்கனவே கூறிவிட்டதாக காட்டமாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்