நடிகர் அல்லு அர்ஜுனுக்கு - நீதிபதி உத்தரவு... | Allu Arjun arrest | Pushpa2 | ThanthiTV
புஷ்பா திரைப்பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஐதராபாத் உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. ஐதராபாத்தின் சந்தியா திரையரங்கில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் காண வந்த ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். இதனிடையே, அல்லு அர்ஜுன் தன் மீதான எப்.ஐ.ஆரை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை ஐதராபாத் உயர்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, அல்லு அர்ஜுனுக்கு 4 வாரங்கள் இடைக்கால ஜாமின் வழங்கி நீதிபதி ஸ்ரீதேவி உத்தரவிட்டார்.