புஷ்பான்னா `Wildfire'.. ரூ.1000 கோடியை நெருங்கும் வசூல்... பற்றி எரியும் பாக்ஸ் ஆபிஸ்
புஷ்பா 2 திரைப்படம் உலகம் முழுவதும் 4 நாட்களில் 829 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது. அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புஷ்பா 2 திரைப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியானது. இதுவரை வெளியான இந்திய திரைப்படங்களிலேயே முதல் 4 நாளில் இவ்வளவு பெரிய தொகை வசூலித்த திரைப்படம் என்கிற சாதனையையும் புஷ்பா 2 பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.