பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு நடிகர் சூரியின் ஹோட்டலில் உணவருந்திய SK
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பிரபல திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் இன்று சாமி தரிசனம் செய்தார்.
தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த சிவகார்த்திகேயனிடம் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் செல்பி எடுக்க முண்டியடித்தனர். அப்போது அவர்கள் அனைவருக்கும் சலிக்காமல் நடிகர் சிவகார்த்திகேயன் போஸ் கொடுத்தார். இதனால் மகிழ்ச்சியடைந்த பக்தர்கள் மீண்டும் வரிசையில் நின்று சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
Next Story