நயன்தாரா ஆவணப்பட விவகாரம்.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சிவாஜி தயாரிப்பு நிறுவனம்
நடிகை நயன்தாரா தன்னுடைய திருமண வீடியோ அடங்கிய ஆவணப்படத்தை நெட்பிளிக்ஸில் கடந்த நவம்பர் மாதம் ரிலீஸ் செய்தார். இந்த ஆவணப்படத்தில் தன்னை கேட்காமல் நானும் ரவுடிதான் பட காட்சியை பயன்படுத்தியதாக நோட்டீஸ் அனுப்பிய படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷ், 10 கோடி நஷ்ட ஈடு கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சூழலில், சந்திரமுகி படத்தின் காட்சிகளை அனுமதியின்றி நயன்தாரா பயன்படுத்தி இருப்பதாக, அந்த படத்தின் உரிமையாளர் நயன்தாராவுக்கும், நெட்பிளிக்ஸ்க்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கள் பட காட்சிகளை பயன்படுத்தியதால், 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும் எனவும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Next Story