உணவு மட்டுமே..சம்பளமே கிடையாது.. யாருக்கும் தெரியாமல் அடிமை போல பண்ணை வேலை செய்யும் மோகன்லால் மகன்
மோகன்லால் மகன் பிரணவ் மோகன்லால் ஸ்பெயினில் ஒரு விவசாய பண்ணையில் வேலை செய்து வருவதாகவும், தங்குமிடம் மற்றும் உணவுக்காக ஊதியம் எதுவும் பெறாமல் அங்கு வேலை செய்து வருவதாகவும், மோகன் லால் மனைவி சுசித்ரா சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்...
பிரணவ் அங்கிருந்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் அந்த அனுபவங்களை தங்களிடம் பகிர்ந்து கொள்வார் என்றும் சுசித்ரா தெரிவித்தார்... பிரணவ் 2 வருடங்களுக்கு ஒரு படம் நடித்து வரும் நிலையில், குறைந்தது வருடத்திற்கு 2 படங்களாவது நடிக்குமாறு தான் தனது மகனிடம் கேட்டுக் கொண்டதாகவும், தன் கணவர் மோகன்லாலுடன் சேர்ந்து தன் மகன் நடிப்பதைத் தான் விரும்பவில்லை எனவும் தெரிவித்த சுசித்ரா, இருவரையும் ரசிகர்கள் ஒப்பிட்டு பார்ப்பது தனக்கு பிடிக்காது என்றும் குறிப்பிட்டார்... 2022 ஆம் ஆண்டு வெளியான ஹிருதயம் திரைப்படத்தின் மூலம் பிரணவ் மலையாள ரசிகர்களிடையே புகழ்பெற்றார். இந்த ஆண்டு ஏப்ரலில் வெளியான வர்ஷங்கல்க்கு ஷேஷம் என்ற மலையாளப் படத்தில் அவர் கடைசியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.