ரசிகர்களுக்காக மாளவிகா பதிவிட்ட அந்த ஒரு போட்டோ..படுவைரலாக்கிய நெட்டிசன்கள் | Malavika Mohanan
நடிகை மாளவிகா மோகனன், சேலையில் கலக்கலாக போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் மாளவிகா மோகனன், ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து அவர் தனுசுடன் மாறன், விஜய்யுடன் மாஸ்டர் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். இறுதியாக அவர் தமிழில் விக்ரமுடன் நடித்த தங்கலான் திரைப்படமும் வெளியான நிலையில், மாளவிகா மோகனனின் கலக்கலான போட்டோஷூட் வைரலாகி வருகிறது.