கட்டாயமாக நான் எனது இசையில் ஏஐ தொழில்நுட்பம் உபயோகிக்க மாட்டேன் என இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்துள்ளார். கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில்
பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதனையொட்டி நடந்த செய்தியாளர் சந்திப்பில், பேசிய ஹாரிஸ் ஜெயராஜ் ஏஐ தொழில்நுட்பம் தொழில்நுட்பம் உபயோகித்தால் பாடகர்களுக்கு அங்கீகாரம் இல்லாமல் போய்விடும் என்று கூறிய அவர், எனது இசையில் எந்த பாடல்களுக்கும் நான் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த மாட்டேன் என திட்டவட்டமாக கூறினார்.