இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (16-08-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-08-16 16:19 GMT

தமிழில் சிறந்த திரைப்படமாக பொன்னியின் செல்வன் முதல் பாகம் தேர்வு...

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது காந்தாரா...

புகார் வந்துள்ள மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திட்டவட்டம்...

பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் இன்று உறுதி...

70வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. தமிழின் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ள பொன்னியின் செல்வன், 4 தேசிய விருதுகளை வென்று அசத்தியுள்ளது. சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை ஏ.ஆர்.ரஹ்மான் பெறுகிறார். திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நித்யா மேனன், சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளார். தகவல்களை விவரிக்கிறார் செய்தியாளர் ராஜா...

நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு, பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று மீண்டும் தொடங்கப்பட்டது. முதல்நாளில், 40க்கும் மேற்பட்ட பயணிகள் இந்த கப்பலில் பயணம் மேற்கொண்டனர். கப்பல் போக்குவரத்து குறித்து பயணிகள் தெரிவித்த கருத்துகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...

சென்னையில் இன்று நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், சட்டமன்ற தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இதனிடையே, காஷ்மீர், ஹரியானா மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய நாளின் முக்கிய அரசியல் நிகழ்வுகளை பின்வரும் தொகுப்பில் பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்