இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (02-08-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-08-02 15:52 GMT

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 338-ஐ கடந்தது...

நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள முண்டகை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மீட்புப் பணிகளை தொடர்வதில் சிரமம்...

வினாத்தாள் கசிவு மூலம் நீட் தேர்வின் புனிதத்தன்மை கெட்டுவிட்டதாகக் கூற முடியாது...

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்று 338ஆக உயர்ந்துள்ளது. 4வது நாளாக மீட்புகள் தொடர்ந்த நிலையில், 4 பேர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே, வயநாட்டில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது. செய்தியாளர்கள் சிவசபாபதி, கார்த்திக் வழங்கிய தகவல்கள் இவை...

நிலச்சரிவில் உருக்குலைந்த பள்ளி மைதானத்தில் விளையாடிய பழைய வீடியோவை பகிர்ந்து ஆசிரியை உருக்கம்...

வயநாடு நிலச்சரிவில் சிக்கி மறுபிறவி எடுத்து வந்துள்ள தங்களுக்கு மத்திய - மாநில அரசுகள் உரிய உதவியை வழங்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் படித்த பள்ளியையும், நண்பர்கள் பலரையும் இழந்துவிட்டதாக நிவாரணம் முகாம்களில் தங்கியுள்ள மாணவர்கள், வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்