இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (29-06-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-06-29 15:49 GMT

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் டி20 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் தற்போது பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது....

சென்னையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் 11 வயது சிறுவன் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே, மெட்ரோ குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர்கள் ராமச்சந்திரன், தாயுமானவன் வழங்கிய தகவல்கள் இவை...

தாயை பிரிந்து, யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த குட்டியானை உடல்நலக்குறைவால் உயிரிழந்த சோகம்...

கோவை மருதமலையில் தாயை பிரிந்த குட்டியானை உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், முதுமலை யானைகள் முகாமில் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறார் செய்தியாளர் சுரேஷ்...

Tags:    

மேலும் செய்திகள்