தாமிரபரணியில் மூழ்கிய சென்னை இளைஞர்கள்நேரில் பார்த்து கதறிய நண்பர்கள்...

Update: 2023-05-09 03:30 GMT

நெல்லையில், தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர். சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த சக்தி என்பவர், நெல்லை திருவேங்கடநாதபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். அவருடன் சென்னையை சேர்ந்த ஸ்ரீராம், அருண், வினோத் ஆகியோரும் சென்றனர். இவர்கள் அனைவரும் திருவேங்கடநாதபுரம் தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். ஸ்ரீராம் மற்றும் அருண் திடீரென நீரில் மூழ்கியதால், அவர்களை காப்பாற்ற நண்பர்கள் முயன்றனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்