"வாழ்க்கை வெறுத்துவிட்டது" - நண்பர்களுடன் இருந்த இளைஞர் | போன் செய்த தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி
ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த இளைஞர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் அரங்கேறி இருக்கிறது.
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சரண் என்ற இளைஞர் கடந்த 4 மாதங்களாக மந்தவெளியில் உள்ள தன் நண்பர்களுடன் தங்கி இருந்தார். இதனிடையே சரண் போனை எடுக்காததால் அவரின் தந்தை பலமுறை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் சரண் போனை எடுக்காததால் வீட்டின் உரிமையாளருக்கு போன் செய்து அவர் சென்ற பார்த்த போது அறையின் உள்ளே சடலமாக கிடந்தார் சரண். அப்போது அவர் கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று கிடைத்தது. அதில் வாழ்க்கை வெறுத்து விட்டதாகவும், இதன் காரணமாக தற்கொலை முடிவை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். விசாரணையில் கோல்டு காயின்ஸ் என்ற ஆன்லைன் விளையாட்டில் அதிகப்படியான பணத்தை இழந்த விரக்தியில் இருந்ததும், சி.ஏ. தேர்வில் 2 முறை தோல்வியடைந்ததால் அவரின் தந்தை கண்டித்ததாக தெரியவந்தது. இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.