திருமணமான பத்தே மாசத்துல கணவனோட சேத்து வைக்க சொல்லி மனைவி தர்ணாவுல ஈடுபட்டிருக்காங்க... வாழ்கையே போராட்டமா மாறுனதுக்கு என்ன காரணம்?
சேலம் ராஜாராம் நகர் பகுதி...
வீதியே வெறிச்சோடி கிடக்க, அங்கிருந்த ஒரு பங்களா வீட்டின் வாயிற்படியில் பெட்டிபடிக்கையுடன் தர்ணா போராட்டத்தில் இறங்கி இருந்தார் ஒரு பெண்.
அந்த பெண்ணிடம் போலீசார் எவ்வளவோ சமாதனம் செய்தும் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை.
யார் இந்த பெண்....? ஏன் இந்த போராட்டம்...? என்று அறிந்து கொள்ள விசாரனையில் இறங்கினோம்.
என்ன நடந்தாலும் இந்த இடத்தை விட்டு நகரபோவதில்லை என தீர்மானமாக கூறி அமர்ந்திருக்கும் இவர் கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த துணிக்கடை அதிபர் மதன் மோகனின் புதல்வி சுபராகா.
26 வயதாகும் சுபகாராவின் புகுந்த வீடு தான் இந்த பங்களா வீடு.
எம். பி. ஏ படித்த சுபகாராவை கடந்த 2021 ஆம் ஆண்டு ARRS துணிக்கடை அதிபர் ரவிச்சந்திரனின் மகன் கார்த்திக் பாலாஜிக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.
நல்லபடியாக தொடங்கிய வாழ்க்கை சரியாக 10 மாதத்தில் சரிவை சந்தித்திருக்கிறது.
மொழி பிரச்சனை.... நிறத்தை வைத்து கேலி... உடலளவிலும் மனதளவிலும் சித்ரவதை... வரதட்சணை கேட்டு துன்புறுத்தல் என
கணவர் கார்த்திக் பாலாஜியும், மாமியாரும் சேர்ந்து சுபகாராவுக்கு பல தொல்லைகளை கொடுத்து வீட்டை விட்டு அடித்து விரட்டி இருக்கிறார்கள்.
திருமணத்தின் போதே வாயடைக்கும் சீர் செனத்தியோடு தான் புகுந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறார் சுபகாரா. ஆனால் அவை எல்லாம் போதாது 5 கோடி பணம் வேண்டும் என கராராக கூறி பிரச்சனை செய்து வந்திருக்கிறார்கள். அதையும் ஒப்புக்கொண்டு வீட்டை விற்று பணம் தருவதாக கூறி இருக்கிரார் சுபகாராவின் தந்தை.
...வீட்டவித்து தரோம்னு சொன்னோம்...
தொடர்ந்து பல கொடுமைகளை செய்த கார்த்திக் பாலாஜி சரியாக 1 வருடம் முடிந்ததும் சுபகாராவிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்.
கணவனின் இந்த செயலால் விக்கித்து நின்ற சுபகாரா விவாகரத்து கொடுக்க மறுத்து கேரளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் வழக்கு முடியும் வரை சுபகாராவை கணவனின் வீட்டிலேயே இருக்க சொல்லி உத்தரவிடப்பட்டது.
நீதிமன்ற உத்தரவை ஏற்று வாழ வந்த சுபகாராவை வீட்டிற்குள் விடாமல், கார்த்திக் பாலாஜியின் குடும்பத்தினர் அடித்து விரட்டியதாக சொல்லப்படுகிறது. உத்தரவு நகல்களை காண்பித்தும் அவரது மனம் மாறவில்லை.
இதனால் மன உலைச்சளுக்கு ஆளான சுபகாரா தனக்கு நீதி கிடைக்கும் வரை விடப்போவதில்லை என தீர்மானித்து கணவனின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்
இதனை அறிந்த கார்த்திக் பாலாஜி வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி இருக்கிறார்.
போலீசார் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்திய பிறகும், சுபகாரா முடிவை மாற்றி கொள்ளாமல் நீதி கேட்டு பூட்டிய வீட்டின் முன்பு போராட்டத்தை தொடர்ந்திருக்கிறார்.
மீண்டும் தனது கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதே அவரது ஒரே கோரிக்கையாக உள்ளது.