மலையடிவாரத்தில் கழுத்தறுத்து பெண் கொலை - வேலைக்கு சென்ற இடத்தில் பயங்கரம்.. தேனி அருகே அதிர்ச்சி சம்பவம்

Update: 2023-05-11 02:54 GMT

தேனி அருகே கால்நடைகளுக்கு புல் அறுக்க சென்ற பெண் மலையடிவாரத்தில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் செல்வி. கூலித் தொழிலாளியான இவர், கால்நடைகளுக்கு தேவையான புற்களை அறுத்து கொடுக்கும் பணியினை செய்து வந்துள்ளார். இதற்காக வழக்கம்போல் அன்னஞ்சி விலக்கு பகுதியில் புல் அறுக்க சென்ற செல்வி, நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவருடைய மகன் போலீசில் புகாரளித்தார். இதனடிப்படையில், செல்வியை போலீசார் தேடி வந்த நிலையில், புல் அறுக்க சென்ற மலையடிவாரத்தில் கழுத்தறுக்கப்பட்டு செல்வி சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், செல்வி அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை அறிந்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்