கடன் தொல்லையால் பெண் விஷம் குடித்து தற்கொலை

Update: 2024-01-23 00:40 GMT

கூலித் தொழிலாளி மனைவியின் நடத்தை குறித்து ஆபாசமாக பேசிய தனியார் நிதி நிறுவன ஊழியர்களால், மனமுடைந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த பாத்திமா பீவி என்பவர், தனது கணவரின் நண்பரான அமீது என்பவருக்கு, தனியார் நிதி நிறுவனம் மூலம் எல்இடி டிவி ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். கடன் வாங்கிய ஒரு சில மாதங்களில், அமீர் ஊரை காலி செய்துவிட்டு சென்று விட்டார். இதனால், பாத்திமா பீவி வாங்கி கொடுத்த கடனுக்காக, மூன்று மாதங்கள் வட்டி கட்டி உள்ளார். அதற்கு மேல் வட்டி கட்ட முடியாததால், பாத்திமா பீவியை ஊழியர்கள் ஆபாசமாக பேசியதாக சொல்லப்படுகிறது. மேலும், அவரது வீட்டில் பொங்கல் பண்டிகையை யொட்டி, ரேஷன் கடையில் கொடுத்த ஆயிரம் ரூபாய் பணத்தையும் ஊழியர்கள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்த நிலையில் உயிரிழந்தார். 2 குழந்தைகளுக்கு தாயான பாத்திமா பீவி, தான் இறப்பதற்கு முன்பு வெளியிட்ட வீடியோ மற்றும் கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்