நாளை டெல்லி செல்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி?
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை டெல்லிக்கு சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு மக்கள் மற்றும் அரசியல் சாசனத்திற்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக தமிழக அரசு குற்றம் சாட்டி வருகிறது. இதுதொடர்பாக, கடந்த 12ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித் திமுக குழு, 20 நிமிடங்கள் அவருடன் பேசியது. பின்னர், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் புகார் மனு குடியரசுத் தலைவரிடம் கொடுக்கப்பட்டது. இதே போன்று, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி சென்றதும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.