"தேவையில்லாமல் நீதித்துறையை ஏன் இழுக்கிறீர்கள்" - சரமாரியாக கேட்ட சென்னை ஐகோர்ட்

Update: 2023-07-21 02:55 GMT

உண்ணாவிரத போராட்டம் நடத்தியது உள்ளிட்ட விவகாரங்களில் பதிவான வழக்குகளை ரத்து செய்யக் கோரி சி.வி.சண்முகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தன.

அப்போது, ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் போராட்டம் நடத்தியபோது, அவரை சிறையில் அடைத்த நீதிபதி அச்சுறுத்தப்பட்டிருக்கிறார், மிரட்டப்பட்டிருக்கிறார் என சி.வி.சண்முகம் பேசியிருப்பதை நீதிபதி சுட்டிக்காட்டினார்.

அரசியல் போராட்டங்களில் தேவையில்லாமல் நீதித்துறையை ஏன் இழுக்கிறீர்கள்? என்றும்,

நீதிபதி அச்சுறுத்தப்பட்டிருக்கிறார், மிரட்டப்பட்டிருக்கிறார் என எப்படி கூறமுடியும்? என கேள்வி எழுப்பினார்.

உங்கள் அரசியலுக்காக நீதித்துறையை இழுக்காதீர்கள் என அதிருப்தி தெரிவித்தார்.

எந்த கட்சி என நீதிமன்றங்களை பார்ப்பதில்லை எனத் தெரிவித்த நீதிபதி,

நீதித்துறையை பொறுத்தவரை ஒரே ஒரு அரசு தான் என்று நீதிபதி குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்