சென்னையில், மன வளர்ச்சி குன்றிய மகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த தாய், தானும் தீக்குளித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மாங்காடு அடுத்த கொளப்பாக்கத்தை சேர்ந்தவர் நடராஜன்.
இவரது மனைவி சுலோச்சனா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், 18 வயதான இவர்களது மகள் மன வளர்ச்சி குன்றியவரென கூறப்படுகிறது.
சம்பவத்தன்று வீட்டின் தனியாக இருந்த சுலோச்சனா, தனது மன வளர்ச்சி குன்றிய மகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு, தானும் தீக்குளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி சுலோச்சனா உயிரிழந்தார்.
அவரது மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மகள் மன வளர்ச்சி குன்றியதால் மன உளைச்சலில் இருந்த சுலோச்சனா, தனக்கு சுவாச பிரச்சினை வேறு இருந்ததால் மிகவும் மன வேதனை அடைந்துள்ளார்.
Chennaiஇதனால், தனக்கு அடுத்து மகளை கவனிக்க ஆளில்லை என கருதி இந்த விபரீத முடிவு எடுத்தது தெரியவர போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.