முதல்வரின் வெளிநாட்டு பயணத்தில் நடந்தது என்ன? - அதிகாரிகள் வெளியிட்ட முக்கிய தகவல்

Update: 2023-06-01 10:00 GMT

முதல்வரின் 2 நாடுகள் சுற்றுப்பயணத்திற்குப் பிறகு அவர்களிடம் கேட்ட போது, மீன்பிடி தொழில் வளர்ச்சிக்காக கடலில் மீன்களை பிடிப்பது முதல் ஏற்றுமதி வரையான தரவு பாதுகாப்பு தொடர்பான திட்டங்கள் வரவுள்ளதாகவும், தொழிற்துறை சார்ந்து School of Excellence அமைப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்ததாகவும் குறிப்பிட்டனர். மேலும், ஜப்பானில் பணியாற்றுவதற்கு தமிழ்நாட்டிலிருந்து தொழிலாளர்களை தகுதிப்படுத்தி அனுப்புவதற்கு தயாராக உள்ளதாக, ஜப்பான் அதிகாரிகளிடம் தெரிவிக்கப் பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். மின் வாகனங்கள் உற்பத்திக்கான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தயாராகவுள்ளதாக ஜப்பான் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், ஐ போன்கள் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களை தமிழ்நாட்டில் அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்ததாகவும் கூறியுள்ளனர். தென் மாவட்டங்களில் தொழில் நிறுவனங்கள், டெல்டா மாவட்டங்களில் உணவு துறை சார்ந்து தரம் உயர்த்தப்பட்ட பொருட்களுக்கான ஆலைகள் கொண்டு வர ஆலோசிக்கப்பட்டதாகவும், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கண்டிப்பாக செயல்பாட்டிற்கு வரும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்