#BREAKING |காற்றழுத்த தாழ்வு நிலை - கடலூரில் கடல் கடும் கொந்தளிப்பு | பேரிடர் மீட்பு படையினர் விரைவு
கடலூர் மாவட்ட மீனவர்கள், நாளை முதல் மறு அறிவிப்பு வரும்வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என, மீன்வளத்துறை அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், ஏற்கனவே கடலில் உள்ளவர்கள் பாதுகாப்பாக கரை திரும்பவும், அதிகாரிகள் ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.