வைரலாக வீடியோ - அமைச்சருக்கு காது கேட்கும் கருவி - தபாலில் அனுப்பிய பாஜகவினர்

Update: 2022-09-17 13:24 GMT

புதுக்கோட்டை பா.ஜ.,வினர், அமைச்சர் சேகர்பாபுவுக்கு, புதிய காது கேட்கும் கருவியை, தபாலில் அனுப்பினர். அந்த கருவியின் மதிப்பு 7 ஆயிரம் ரூபாய் என கூறப்படுகிறது. இந்துக்கள் குறித்து தி.மு.க. எம்.பி. ஆ. ராசா பேசியது குறித்து அமைச்சர் சேகர்பாபுவிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு, தனக்கு காது கேட்கவில்லை என்பது போல், அமைச்சர் சேகர்பாபு சைகை காட்டி சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதை தொடர்ந்து, காது கேட்கும் கருவி அனுப்பப்பட்டுள்ளதாக பாஜக தரப்பு தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்