- அன்புஜோதி ஆசிரம வழக்கில் கைதான 8 பேரை, காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி, சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
- விழுப்புரம் அருகே அன்புஜோதி ஆசிரமம் குறித்து சர்ச்சைக்குரிய புகார்கள் எழுந்த நிலையில், ஆசிரமத்தின் நிர்வாகி உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
- இவ்வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்நிலையில் ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட 8 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
- 8 பேரையும் விசாரித்தால் பல விவரங்கள் வெளிச்சத்திற்கு வரும் என நம்புவதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.