பட்டப்பகலில் பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு... சிக்கிய திருடனை பொடனியில் தட்டி புரட்டி எடுத்த பொதுமக்கள்

Update: 2023-01-01 11:13 GMT

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், பெண்ணிடமிருந்து தாலிச் செயினை பறித்து செல்ல முயன்ற நபரை, பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். திண்டிவனம் தென்களவாய் பகுதியை சேர்ந்த அன்பரசன் என்பவர், தனது மனைவியுடன் இந்திரா காந்தி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர், திடீரென அன்பரசன் மனைவியிடம் இருந்து தாலிச் செயினை பறித்து செல்ல முயன்றபோது, வசமாக சிக்கியுள்ளார். தகவலின் பேரில் வந்த போலீசார், பொதுமக்களிடம் இருந்து நபரை மீட்டு, காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், ஆசூர் பகுதியை சேர்ந்த ஜெயமுருகன் என தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்