வாடகை வீட்டில் மாணவர்களிடம் ஜோராக நடந்த விற்பனை - விழுப்புரத்தில் அதிர்ச்சி | villupuram

Update: 2022-12-19 16:47 GMT

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே, மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பதாக கூறி, போதை ஊசி மற்றும் போதை எண்ணெய் விற்று வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்த பூவாத் மற்றும் சென்னையை சேர்ந்த உமன் பிரசாந்த் ஆகிய இருவரும், விழுப்புரம் அருகே மொரட்டாண்டி பகுதியில், வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஒன்றை நடத்தி வந்தனர். இதனிடையே, மொரட்டாண்டி பகுதியில், போலீசார் சோதனை நடத்தியபோது, கவுன்சிலிங் நடத்தி வரும் வீட்டிலும் ஆய்வு செய்துள்ளனர். அப்போது, போதை ஊசி மற்றும் போதை எண்ணெயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்