ஆதரவற்றவர்களுக்கு நட்சத்திர விடுதியில் உணவு... தன் கைகளால் பரிமாறி மகிழ்ந்த விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் இரண்டாம் பாகம் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் பிச்சைக்காரர்களை அழைத்து படம் பார்க்க வைத்ததுடன், அவர்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார், விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா. இந்த நிலையில் ஆதரவற்றவர்களுக்கும் குழந்தைகளுக்கும் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அசைவ உணவுகள் தன் கைகளினாலே பரிமாறி விருந்தளித்துள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி. அவரது இந்த செயலானது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.