2 கி.மீ செல்ல 30 நிமிடங்கள்... நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் - மக்கள் அவதி
5 நிமிட பயண தூரத்தை கடக்க 30 நிமிடங்களுக்கு மேல் ஆவதாக வேதனை ஆகிறது நீண்ட நேரம் காத்திருந்து ஊர்ந்து செல்லும் வாகனங்கள் மதுரையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணியால் போக்குவரத்து நெரிசல், நீண்ட நேரம் காத்திருந்து ஊர்ந்து செல்லும் வாகனங்கள் முல்லை பெரியாறு அணையில் இருந்து குழாய்கள் மூலம் மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்திற்காக மதுரை மாநகராட்சிக்கு உட்பட 100 வார்டுகளில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது, மதுரை பழங்காநத்தம் பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளுக்காக சாலையோரங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டன,
இதனால் பழங்காநத்தம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது, குழாய் பதிக்கும் பணியால் மதுரை - திருப்பரங்குன்றம் பிரதான சாலை முழுதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது, பைக்காரா முதல் வசந்தநகர் வரையிலான பயண தூரம் 5 நிமிடங்களுக்கு பதிலாக 30 நிமிடங்கள் ஆகிறது,வாகனங்கள் நீண்ட நேரமாக காத்திருந்து ஊர்ந்து செல்லக்கூடிய நிலையில் உள்ளது, இன்று விடுமுறை நாளாக இருந்தும் 500 க்கும் மேற்பட்ட வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி செல்ல வேண்டிய சூழலில் உள்ளது