ரூ.250 லஞ்சம் வாங்கும் வி.ஏ.ஓ. - வைரல் வீடியோ | Madurai | VAO | Viral Video
மதுரையில், கணவனால் கைவிடப்பட்டோர் சான்றிதழ் வழங்க, கிராம நிர்வாக அதிகாரி, 250 ரூபாய் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மதுரை மேலமடை பகுதியில் உள்ள விஏஓ அலுவலகத்தில், யகப்பா நகர் பகுதியை சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவர், கணவரால் கைவிடப்பட்டோர் சான்றிதழுக்காக விண்ணப்பத்திருந்தார். சான்றிதழ் வழங்குவதற்கு கிராம நிர்வாக அதிகாரி ரமணி என்பவர் ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. அப்போது முதல் தவணையாக 250 ரூபாயை கொடுக்கும்போது, வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.